வழமை நிலைக்கு திரும்பும் சுற்றுலாத்துறை!

இலங்கை மீது விதித்திருந்த பயணத் தடையை பல நாடுகள் நீக்கியிருப்பதால் சுற்றுலாத்துறையை, விரைவில் வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பின்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில் – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர், நாட்டின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் தற்போது வழமை நிலைக்குத் திரும்பி வருவதாகவும் கூறினார்.
சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதே தற்போது செய்ய வேண்டிய பிரதான விடயமாகும். அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து அங்கு கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதார செயற்பாடுகளைச் சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். இந்த அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்துப் பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்
Related posts:
|
|