வழமைக்குத் திரும்பியது பொதுபோக்குவரத்து சேவைகள் – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!
Monday, April 4th, 2022
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சரும், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரும் தமக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இத்தாலியில் இலங்கை சாரதிப்பத்திரத்திற்கு அனுமதி!
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி செயலகம் திடீர் அறிவிப்பு!
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
|
|
|


