வழக்கு நடவடிக்கைகளின் தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை – விசேட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிப்பு!

நாட்டில் நீதிமன்ற விசாரணைகள் தாமதமாவதைத் தடுப்பதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் நீதிபதிகளின் எண்ணிக்கை 112 ஆகவும், நீதிமன்றங்களின் எண்ணிக்கை 125 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் கூடுதலாக தேங்கியிருப்பதனால் இவற்றை விரைவில் விசாரித்து அதன் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் அறிக்கை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரங்கன ஹேரத்தின் சழலில் சிக்கி வெள்ளையடிக்கப்பட்டது அவுஸ்திரேலியா அணி !
மூன்று நாள்கள் மட்டுமே பல் மருத்துவரின் சேவை அச்சுவேலி வைத்தியசாலையில் நோயளர்கள் பெரும் சிரமம்
5 ஆயிரம் புசல் விதை நெல்லை கொள்வனவு செய்யத் திட்டம்!
|
|