வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை!
Sunday, January 29th, 2023
நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவிக்கையில், பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்நிலை அடுத்த சில தினங்களிலும் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடரலாம்.
எனவே முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கை!
பொலிஸ் துணையுடன் வெட்டப்படுகிறது மாடுகள் : வேலணை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்!
மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம் – கொரோனா தொடர்பில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!
|
|
|


