வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர்களுக்கு – இலவச மண்ணெண்ணை வழங்கி வைப்பு!
Monday, June 19th, 2023அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சியால் சீனா அரசின் உதவியுடன் கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் இலவச மண்ணெண்ணெய் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் பருத்தித்துறை மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர்களுக்கு தலா 150 லீற்றர் இலவச மண்ணெண்ணையில் முதற்கட்டமாக 75 லீற்றர் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சரும் யாழ்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வடமராட்சி பிரதேச பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
000
Related posts:
இலங்கை - சீனா இடையில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்ள தீர்மானம்!
நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!
பரவலாக மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|