வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்ம்!
Sunday, August 30th, 2020
வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இன்றையதினம் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட செயலகம் வரையும், மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் காலை 10 மணிமுதல் கவனயீர்ப்பு போராட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளிக்க முன்வந்துள்ளமையால், வடக்கு, கிழக்கு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
அரிசியின் விலை தொடர்ந்து உயர்வு!
இலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள் உள்ளதாக தேசிய அபாயகர...
வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை!
|
|
|


