வலயக் கல்விப் பணிமனைகளை அதிகரிக்க தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Saturday, January 26th, 2019

தொகுதி வாரியான கல்விப் பணிமனைகளை நீக்கி, வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 98 வலயக் கல்விப் பணிமனைகள் உள்ளன. இந்நிலையில், குறித்த வலயக் கல்விப் பணிமனைகளை 200 அளவில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக தொகுதி வாரியிலான கல்விப் பணிமனைகளை நீக்கி, அவற்றுக்கு வழங்கப்படாத நிதி அதிகாரங்களை வலயக் கல்விப் பணிமனைக்கு வழங்க, அவற்றின் நிர்வாகத்தை இலகுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 லட்சத்து 50 ஆயிரம் அளவில் ஆசிரியர்கள் இருக்கின்றபோதும், 10 ஆயிரம் பேரளவில் வருடமொன்றுக்கு சலுகை விடுமுறையில் செல்கின்றனர்.

இதேநேரம், மேலும் சில விடுமுறைக்கு அமைய, 10 ஆயிரம் பேர் விடுமுறையில் செல்கின்றனர்.

இவற்றின் காரணமாக, மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

எனவேதான், வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆசிரியர்களை கையிறுப்பில் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: