வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!
Sunday, May 19th, 2019
நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள வலிகாமம் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு உடுவில் கோட்ட அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமாகாணத்தில் அதிக பாடசாலைகளைக் கொண்ட வயமாகக் காணப்படுகின்ற வலிகாமம் கல்வி வலயத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு வலயக்கல்விப்பணிப்பாளரை நியமிக்காமை வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
கல்வித் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்குகின்ற எமது வலயத்தின் செயற்பாடுகளைக் கொண்டு செல்லக்கூடிய எமது வலயத்தில் கடந்த காலத்தில் சுகாதாரக்கல்விப் பணிப்பாளராகக் கடமை ஆற்றிய சு.சுந்தரசிவத்தை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சை!
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை - தேசிய கணக்...
இ.போ.ச ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவாக 2,508 மில்லியன் ரூபா - தேசிய கணக...
|
|
|


