வற்வரி அமுல்படுத்தப்பட்டால் ஹர்த்தால்!

Saturday, August 6th, 2016

வற்வரி அமுல்படுத்தப்பட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை வர்த்தக சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றியத்திலுள்ள உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். இதற்கமைய வர்த்தக மற்றும் தொழிற்துறைச் சபை உள்ளிட்ட பல்வேறு வகையிலும் போராட்டங்களை நடத்த பிரதிநிதிகள் சம்மதித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வற்வரியில் இயலுமான அளவில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியிருக்கின்றார். எவ்வாறாயினும் வற்வரி சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 10ஆம்,11ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பிலான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 9ஆம் திகதி சபையில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் - பருத்தித்துறை பிரதேச செயலர் !
குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் - பாதுகாப்பு அமைச்...
பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!