வறுமைக் கோட்டுக்குட்பட்ட யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன

‘புனர்வாழ்வும் ,புதுவாழ்வும்’ எனும் சர்வதேச அமைப்பின் எற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிறுவர்கள் மேம்பாட்டு அபிவிருத்திப் பிரிவின் நெறிப்படுத்தலில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கரவண் டிகள் கையளிப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ( 21-04-2016) பிற்பகல்-2 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது..
இந்நிகழ்வில் ‘புனர்வாழ்வும் ,புதுவாழ்வும் எனும் சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் வேலாயுதம் சர்வேஸ்வரன் கலந்துகொண்டு துவிச்சக்கரவண்டிகளைப் பயனாளிகளிடம் சம்பிராதயபூர்வமாக வழங்கிவைத்தார். குறிப்பாக சுழிபுரம் காட்டுப்புலம் பகுதி மாணவர்களுக்கும் , யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட மாணவர்களுக்கும் என மொத்தமாக 30 துவிச்சக்கரவண்டிகள் இதன் போது வழங்கப்பட்டன .
குறித்த நிகழ்வில் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Related posts:
கிணற்றிலிருந்து பெண்னொருவரின் சடலம் மீட்பு: மகன் கைது!
2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் - இராஜாங்க அமை...
அரியாலை உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் – துறைசார் அதிகாரிகள் கள விஜயம்!
|
|