வறட்சி நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவ உதவி : ஜனாதிபதி

Wednesday, August 2nd, 2017

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவ உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மக்கள் பல அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு உலருணவு வழங்குவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான முன்மொழிவு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts: