வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, January 18th, 2017

வறட்சியால் வயல் நிலங்கள் பதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் வறட்சியால் அநேகமான பகுதிகளில் நெற் செய்கை அழிவடைந்துள்ளது.இன்னும் சில வாரங்களுக்கு வறட்சி நீடித்தால் எஞ்சிய நெற் செய்கையும் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் அடுத்த போகத்தில் இருந்து நெற் செய்கைக்கு மேலதிகமாக சோளம், உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய் செய்கைகள் என்பன கட்டாயமாக காப்புறுத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளன.

இதற்கான யோசனை வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

drought

Related posts: