வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் – இலங்கை மத்திய வங்கி!

Wednesday, June 2nd, 2021

கொவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு மேலும் நிவாரணத் திட்டங்களை அமுற்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் வங்கிகளில் கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலை இதன்போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.

இதன்பிரகாரம் கடனுக்கான தவணைக்கட்டணம் மற்றும் வட்டி செலுத்துவதற்கு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை சலுகை வழங்கப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் மத்திய வங்கி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர...
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
எமது கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதை அமைச்ச...