வரும் 16 ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை!

Sunday, May 6th, 2018

இம்மாதம் 16ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட உள்ளதாக குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் இதற்காக சுமார் 1000 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 30,000 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 3,000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட இருப்பதாகவும் குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: