வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரி – புடின் கலந்துரையாடல்!
Monday, January 16th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு செல்லவுள்ளார். வன்னியின் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்துக்கு பீ.எம்.ரி. யுத்த டாங்கிகளை வழங்கி ரஷ்யா உதவியதாகவும், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இலங்கைக்கு சார்பாக ரஷ்யா குரல் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts:
வியட்நாம் ஜனாதிபதி காலமானார்!
போக்குவரத்து சேவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள்- வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்த...
கொவிட் பரவலை கட்டுப்படுத்த விரைவில் கொள்கை ரீதியான தீர்மானம் - சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு!
|
|
|


