வரும் திங்களன்று முக்கிய அறிவிப்பு : அமைச்சர் பைசர் முஸ்தபா!
Sunday, November 26th, 2017
எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வைத்து அவர் வெளியிடுவார் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்..
பைசர் முஸ்தபாவிற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பே காரணம் என்று தெரிவித்து, இவை முன்வைக்கப்பட்டன. இந்தசூழ்நிலையில் அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..
Related posts:
ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது - பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்...
மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!
தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் - ஜன...
|
|
|


