வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை – உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் பணிப்பு!
Thursday, March 2nd, 2023
வருமான வரி செலுத்த தவறிய பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இவ்வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று நிதியமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
வரி வசூல், வெற்றிடங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சந்திர கிரகணம்: வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு!
25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் - பிரதிப் பணிப்பாளர் யமுன...
|
|
|


