வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி!
Thursday, June 25th, 2020
வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் செலுத்தப்படவிருந்த வருமான வரியை செலுத்த தவறியவர்களுக்கான அபராதத்தை அறவிடாதிருக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உற்பத்திக் கைத்தொழில் துறையில் அதிகரிப்பு - புள்ளி விபரவியல் திணைக்களம்!
பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை - வடமாகாண ஆளுநர் !
பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா பயணமாகின்றார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
|
|
|


