வருமானம் கொட்டும் கடலட்டையைவிட்டு இன்னும் மீன்பிடியில்தான் வடக்கு மீனவர் – உயிரின செய்கையாளர் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர்!

Saturday, June 9th, 2018

மீன்பிடிப்பதைவிடக் கூடிய வருமானம் தரக்கூடியது கடலட்டைத் தொழில். ஆனால் எம்மவர்கள் இவற்றைக் கவனிக்காமல் தனித்து மீன்பிடியில் மாத்திரமே கரிசனை காட்டுகின்றனர். இனியாவது இங்குள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். இங்குள்ள வளத்தை இங்குள்ளவர்கள் பயன்படுத்தாததால்தான் பிறமாகாண மீனவர்கள் இங்கு வருகிறார்கள் என்று கொள்ள முடியும் என நீர்வாழ் உயிரின செய்கையாளர் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பா.நிருபராஜ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கான நீர் வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் வெளிப் பிரதேச மீனவர்கள் அதிகம் வருகை தந்து கடற்றொழில் உட்பட கடலட்டை பிடித்தல் போன்ற அது சார்பான வருமானம் பெரிதளவு பெறக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வளங்களை வைத்துக் கொண்டு வடக்கு மாகாண மீனவர்கள் ஏன் இவற்றில் ஈடுபட பின்நிற்கின்றார்கள்? கடலட்டை பிடித்தல் வளர்த்தல், கடற்தாவரங்கள் வளர்த்தல், பெரிய நண்டுகளை வளர்த்தல், இறால் வளர்ப்பு போன்றவை எமது பிரதேச்தில் ஊக்குவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தொழில்களில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு அரசு மூலமாக உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதோடு மானியங்கள் வழங்கவும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Related posts: