வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை!
Tuesday, November 14th, 2023
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ரஷ்யாவில் இருந்து நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து 10 ஆயிரத்து 64 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 9 ஆயிரத்து 535 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 6 ஆயிரத்து 545 சுற்றுலாப்பயணிகளும் பிரித்தானியாவில் இருந்து 3 ஆயிரத்து 770 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு !
பாதுகாப்பு தொடர்பில் புதிய ஜனாதிபதியின் முதலாவது நியமனம்!
பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது - மத்திய...
|
|
|


