வருகின்றது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

Saturday, October 1st, 2016

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு பிரதமருடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த மார்ச் மாதமளவில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று உலக பயங்கரவாத நடவடிக்கைகள் பல்வேறு புதிய நுட்பங்களை கையாண்டு பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஆகவே தற்கால பயங்காரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் விதமான வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார். இதற்காக இலங்கையின் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் விஷேட துறைசார்ந்த நிபுணத்துவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்வரும் 20, 30 வருடங்களுக்கு செல்லுபடியாகும் விதமான முறையில் இந்த புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

94643465Ra

Related posts: