வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் – சர்வதேச நாணய!

Saturday, August 12th, 2017

இலங்கையில் மேற்கொள்ளப்படும் வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் போதுமான அளவு பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.

இலங்கை தொடர்பான நாணய நிதியத்தின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது2016 ஆம் ஆண்டு பெறுமதி சேர் வரி 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தமை மற்றும் இந்த வரிக்குள் அத்தியாவசிய பொருட்களுக்கு விதி விலக்கு வழங்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்து பொது மக்களிடையே விளக்கமளிக்கப்படவில்லை

குறிப்பாக வரி சீர்த்திருத்தின் அவசியம் மற்றும் அதனுடான எதிர்கால நன்மைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நாணய நிதியத்தின் அதிகாரிகள் கருதுகின்றனர்

அதேநேரம் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நாட்டின் வரி வருமான முறைமையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts: