வரிச் சுமையை பொதுமக்கள் மீது திணிக்க அனுமதிக்கக்க மாட்டேன்- ஜனாதிபதி
Tuesday, April 19th, 2016
வரிச் சுமையைப் மக்கள் மீது சுமத்த அனுமதிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த வற் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென நிதியமைச்சு தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய வற் வரியை அதிகரிக்க இடமளிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி கூறியுள்ளார்.
வரி அதிகரிப்பினால் சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும்ஆகவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் தான் ஈடுபடப்போவது இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு – முதற்கட்ட பணி பூர்த்தி!
பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி அமைச்சரவையில் யோசனை!
பொறுப்பாக நடந்து கொள்கின்றோம் - நாட்டை முடக்க வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்துவதால் நாடு முடக்கப்பட...
|
|
|


