வரவு செலவுத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக இரு குழுக்கள் நியமனம்!
Sunday, September 11th, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை இறுதி நிலைப்படுத்துவதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக்குழுக்கள், பிரதமரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வரவு செலவுத்திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் கீழ் வருகிறதா? என்பனை அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் அமைச்சர் சரத் அமுனுகம, அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜெயசேகர உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். இந்தநிலையில் தேசிய அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் முதல்காலப்பகுதியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts:
ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!
யாழ்ப்பாண மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் கையளிப்பு!
வடக்கில் மாவட்ட அரச அதிபர்கள் மாற்றம்!
|
|
|


