வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் அமைச்சர் மஹிந்த அமரவீர!
Thursday, January 19th, 2023
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியை பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு வழி வகுக்கும் வகையில் தான் பதவி விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர் விவசாயத்துறை அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார்.
இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று சூரிய கிரகணம் தென்படவுள்ளது!
கொரோனா தாக்கத்தால் 16.8 கோடி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை - ஐ.நா. தகவல்!
இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி - மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உ...
|
|
|


