வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

Tuesday, November 26th, 2019


இதன்படி வடக்கு மாகாணத்தில் 221 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்வளங்கப்பட்டுள்ளதுடன் 419 ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த இடமாற்றமானது தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சே.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் க.பொ.த உயர்தரத்துக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தோடக்கம் இடமாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த இடமாற்றத்தில் ஆட்சேபனைகள் இருப்பின் வரும் டிசெம்பர் 6ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவேண்டும். மேன்முறையீடு தோடர்பான இறுதித் தீர்மானம் வரும் டிசெம்பர் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

வெற்றிடம் இல்லாமை காரணமாக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பொருத்தமான வெற்றிடம் உள்ள கல்வி வலயத்துக்கு விண்ணப்பிக்கும் போது பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: