வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை ஒக்ரோபர் மாதத்தை விடவும் நவம்பர் மாதம் அதிகரித்திருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்து 661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதேவேளை நவம்பர் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் 71 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். இருப்பினும் நவம்பர் மாதத்தில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக குறைவடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் அதிகப்படியாக 842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபபட்டுள்ளனர். இதையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 825 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வவுனியாவில் 713 பேரும், மன்னாரில் 540 பேரும், மற்றும் முல்லைத்தீவில் 129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம்முதல் இதுவரை வடக்கு மாகாணத்தில் 41 ஆயிரத்து 952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 890 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|