வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு !
Saturday, March 27th, 2021
எதிர்வரும் மே மாதமளவில் வடமாகாண சுகாதாரத் திணைக்களமும், யாழ்.போதனா வைத்தியசாலையும் இணைந்து கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்கள் தத்தமது பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, மாங்குளம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகளில் அல்லது யாழ் போதனா வைத்தியசாலையில் பதிவுகளை மேற்கொள்ளவதன் மூலம் கண்புரை சத்திரசிகிச்சையினை செய்துகொள்ள முடியும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக பாரிய வேலைத்திட்டம் - அரசாங்கம்!
தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவிப...
சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சின் செயலா...
|
|
|


