வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று மின்தடை! 

Tuesday, September 12th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி,  இன்று காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் காரைநகர் சிவன்  கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும் ,
இன்று காலை-09 மணி முதல் மாலை-05 மணிவரை கிளிநொச்சி மாவட்டத்தின் வற்றாப்பளை , கேப்பாப்பிலவு, நாவற்காடு(முள்ளியவளை), விமானப்படை-1 மற்றும் விமானப்படை-2, 59 ஆவது படைப்பிரிவு(14ESR-01 மற்றும் 14ESR-02) முகாம்கள், SFHQ வற்றாப்பளை, CLI நந்திக்கடல், நந்திக்கடல் 16 ESR படைப்பிரிவு ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குள கிராமம், வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை முகாம், மடுக்குளம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பாடசாலை  மட்டத்திலிருந்து  நல்லிணக்கம்ஏற்படுத்தப்பட  வேண்டும் –  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நந்தகுமாரன் தற்கா...
தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு - ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் க...