வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று மின்தடை!

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும் ,
இன்று காலை-09 மணி முதல் மாலை-05 மணிவரை கிளிநொச்சி மாவட்டத்தின் வற்றாப்பளை , கேப்பாப்பிலவு, நாவற்காடு(முள்ளியவளை), விமானப்படை-1 மற்றும் விமானப்படை-2, 59 ஆவது படைப்பிரிவு(14ESR-01 மற்றும் 14ESR-02) முகாம்கள், SFHQ வற்றாப்பளை, CLI நந்திக்கடல், நந்திக்கடல் 16 ESR படைப்பிரிவு ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குள கிராமம், வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை முகாம், மடுக்குளம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள...
|
|
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிக...
புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு தொடர்பான நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கை இந்தமாத இறுதியில் அரசாங்கத...
தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சி...