வடமராட்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு!

வடமராட்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (12.06.2023) திங்கள்கிழமை
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஒருங்கிணைப்பாளர் எந்திரி சாந்தாதேவி,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் வடமராட்சி தென்மராட்சி பிரதேச இணைப்பாருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் மீனவர்களுக்கு தலா 75 லீட்டர்படி இலவச மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள்
கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Related posts:
|
|