வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் எரிந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
Friday, June 21st, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று (20) எரிந்த நிலையில் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணியை சேர்ந்த பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார்.
இதன்போது எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் தெரியவராத போதும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
|
|
|


