வடபகுதி கடற்றொழில் துறையை மேம்படுத்துவதே எமது நோக்கம் – கடற்றொழில் நீரியல் வழத்துறை அமைச்சின் செயலாளர்
Friday, July 14th, 2017
வடபகுதி கடற்றொழில் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே பருத்தித்துறை மீன்பிடித்துறைமுக நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்க உள்ளதாக கடற்றொழில் நீரியல் வழத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி மங்கலிக்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க பிரதிரிதிகளுடன் இடம்பெற்ற கலந்தரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உத்தேசிக்கப்பட்டுள்ள இறங்குதுறை நிர்மாணிக்கப்படுமானால் இப்பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு அனுகூலமானதாக இருக்கும். அதுமட்டுமன்றி இத்துறைமுகத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்யக்கூடியதான சந்தர்ப்பமும் உருவாகும். அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் ஒருவாய்ப்பாகவும் இது அமையும்.
தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு வங்கிகளினூடாக இலகு கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் அதனூடாக குறித்த தொழிற்றுறையை பல்வேறு வகைகளிலும் மேம்படுத்தக்கூடியதான சந்தர்ப்பங்களும் உருவாகும் என்றும் தெரிவித்தார்
Related posts:
|
|
|


