வடக்கை மேம்படுத்த நோர்வே முன்வருகை!
Wednesday, November 23rd, 2016
வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியன இணங்கியதன் அடிப்படையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
200 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக நோர்வே தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினூடாக விவசாயம், மீன்பிடி மற்றும் புதிய வியாபார மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related posts:
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்!
சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி ஷவேந்திர சில...
|
|
|


