வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை 17, 18 ஆம் திகதிகளில்!
Thursday, July 12th, 2018
வடக்கு மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆள்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வும் பிரயோகப் பரீட்சையும் அடுத்தவாரம் நடைபெறவுள்ளன. செம்மணி வீதி, நல்லூரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சில் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நடைபெறும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அறிவித்துள்ளார்.
இதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றிருந்தன. குறித்த எழுத்துப் பரீட்சைகளில் தகைமை பெற்ற 353 பட்டதாரிகளே நேர்முகத்தேர்வுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நேர்முகத் தேர்வுக்கு தெரிவானோரின் விவரங்களை றறற.நனரஅin.np.பழஎ.டம எனும் முகவரியில் பார்வையிட முடியும் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்களை றறற.np.பழஎ.டம என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம்.
Related posts:
|
|
|


