வடக்கு சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை – ஈபிடிபி ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

வடக்கு சுகாதாரத் துறை திருப்திகரமாக இல்லை என பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (08.09.2023) யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை கவலை தரும் விடையமாகும்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்திய சாலைகளில் இது போன்ற பல சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.
சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாவியர்கள் தான் காரணம் என பரவலாக குற்றச்சாட்டு முன்பவைக்கப் படுகிறது.
அதுமட்டுமல்லாது சிறுமிக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்து காலாவதியான மருந்தா என்ற சந்தேகங்கள் எழுகின்ற நிலையில் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எமது கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வடமாகாண சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|