வடக்கு கிழக்கில் மேலும் 10000 பேருக்கு வீடுகள் அமைக்கப்படும் – மீள்குடியேற்ற அமைச்சின் சௌலாளர் சிவஞானசோதி!
Friday, October 14th, 2016
வடக்கு கிழக்கு பகுதிக்க மேலும் 10000 வீடுகள அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் மாவட்ட செயலகங்களினூடாக இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட இருப்பதாக அமைச்சின் சௌலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட 10000 வீடுகள் அக்டோபர் நவம்பர் மாதமளவில் பூர்த்திசெய்யப்படும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர் இதேபோன்று மேலும் 10000 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் வழங்க ஏற்பாடுசெய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற குடும்பங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் வயோதிபர்கள் போன்றவர்களை உள்ளடக்கி இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அவசர அழைப்பு!
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
|
|
|


