வடக்கு உள்ளுராட்சி சபைகளின் பழுதடைந்த வாகனங்களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன!

வடக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளின் கீழ் உள்ள பழுதடைந்த வாகனங்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழ் உள்ள சபைகளில் ஏராளமான பழுதடைந்த வாகனங்கள் உள்ளன. இவை பாவனைக்கு உதவாத வகையில் இடத்தை அடைத்துக்கொண்டு காணப்படுகின்றன.
அத்துடன் சபைகளுக்கான வாகனத் தேவைகளும் உள்ளன. எனவே கொழும்பு அமைச்சு ஊடாக பழுதடைந்த வாகனங்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் தற்போது உள்ளுராட்சிச் சபைகளுக்குப் பழுதடைந்த வாகன விவரங்களை அனுப்பிவைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது. பாவனையில் இருந்த காலம், பழுதின் தன்மை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த தரவு பெறப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடல் 5.6 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு !
புதிய அமைச்சுக்களின் கடமைகள் தொடர்பான வர்த்தமானி விரைவில்!
வங்களாவடி சந்தி பகுதி கிணறொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!
|
|