வடக்குப் பொலிஸாரின் விடுமுறைகள் நிறுத்தம்!

Tuesday, May 15th, 2018

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் ரொசான் பெர்னாண்டோவின் உத்தரவுக்கு அமைவாகவே விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. என்ன காரணத்துக்காக விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

இதேவேளை வடக்கு மாகாண பொலிஸாரின் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது நாளை மறுதினம் 17 ஆம் திகதியும் 19 ஆம் திகதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts: