வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முதல் தடவையாக யாழ். போதனா வைத்தியசாலையில் ‘DEXA SCAN’ பரிசோதனைச் சிகிச்சை அறிமுகம்!

Saturday, November 5th, 2016

யாழ். போதனா வைத்தியசாலையில் எலும்பு தேய்வடையும் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சையளிப்பதற்கான DEXA SCAN பரிசோதனைச் சிகிச்சை முறை இன்று வெள்ளிக்கிழமை(04)   வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(04) முற்பகல்-11 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையின்அகஞ்சுரக்கும் தொகுதிச் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய நிபுணர் சிவமகாலிங்கம் அரவிந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் சிறப்பு வைத்திய நிபுணர்களும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முதல் தடவையாக யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே இந்தச் சிகிச்சை முறை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிகிச்சை முறைக்கான இயந்திரம் யாழ். போதனா வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயிரம் மில்லியன் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 unnamed (3)

Related posts: