வடக்கில் வீதி விபத்துக்களைத் தடுக்க வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்!
Monday, September 19th, 2016
வீதி விபத்துக்களால் ஏற்படும் இழப்புக்களைத் தடுத்துச் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான எழுந்து நிற்போம் எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி வடக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் வடக்கு மாகாணத் தொழிற் சங்கங்களையும், பொதுமக்களையும் ஒன்றிணையுமாறும் அந்த சங்கம் கேட்டுள்ளது. இதன் போது எதிர்கால விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாணத் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளால் கோரிக்கைகளை முன்வைத்துக் கையொப்பமிடப்பட்டுள்ள மகஜரொன்று யாழ். மாவட்ட அராசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சம்பந்தன் கூறிவருவது அனைத்தும் பச்சைப் பொய் என்கிறார் கஜேந்திரகுமார்!
இயற்கை உரப்பாவனையை மேம்படுத்தும் ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பு –...
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிப்...
|
|
|


