வடக்கில் வகுப்பறைகள் சிறிதாகவும் – ஓய்வறைகள் பெரிதாக உள்ளன – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்டு!
Friday, July 14th, 2023
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் வகுப்பறைகள் சிறிதாகவும் ஆசிரியர்களின் ஓய்வறைகள் பெரிதாகவும் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் உபசெயலாளர் ஹொல்வின் குலசேகரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆசிரியர் இடமாற்றம் உரிய முறையில் இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மரம் வெட்டும் இயந்திர கருவிகளின் பதிவு 20 ஆம் திகதி ஆரம்பம்!
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது - தொற்று நோயியல...
2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10 ஆயிரத்து 077 தொடருந்து சேவைகள் இரத்து - தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் ...
|
|
|


