வடக்கில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அண்மை நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருவதால் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மழை மேகம் சூழ்ந்து காணப்படுவதுடன், காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அதிபர்கள், ஆசிரியர்கள் ஜூலை 18 -19 சுகயீன விடுமுறையில்!
மீண்டும் வீட்டில் இருந்து பணி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை!
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜ...
|
|