வடக்கில் பூரண ஹர்த்தால் – குடாநாட்டில் இயல்பு நிலை முடக்கம்!
 Thursday, April 27th, 2017
        
                    Thursday, April 27th, 2017
            கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது.
இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதனால் இன்றையதினம் காலை யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும் இயல்பு நிலை முடங்கியுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது.
இதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் எனப் பல்வேறு தரப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இன்று முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|  | 
 | 
 
            
        











 
         
         
         
        