வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் டிசம்பர் மாதத்துக்குள் மீள கையளிக்கப்படும் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மீள கையளிக்கப்படும் என வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் காணிகளை விடுவிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முடியும்.
குறித்த காணிகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் முழுமையாக கையளிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஊடாக மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படும் என வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெலிக்கடை படுகொலை தொடர்பில் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று ஹொட்லைன் எண்கள் அறிமுகம்!
எரிபொருள் வழங்கலில் முறைகேடா - பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!
|
|