வடக்கில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!
Monday, June 27th, 2022
வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களிற்கு பெற்றோல் வழங்கப்படாமையை கண்டித்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்களின் ஊழியர்கள் இன்று (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் வழமையான பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. மேலும் யாழ். மத்திய பேரூந்து நிலையமும் இன்று காலை வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது
இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் பேருந்து பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் அவை இன்னும் கிடைக்கபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜூலை முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டணங்கள் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் நேற்று தெரிவித்திருந்தன.
இதன்படி நாளை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


