வடக்கிற்கு வரும் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை -வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி !
Tuesday, November 1st, 2016
வடக்கில் சில சிறிய சம்பவங்கள் இடம்பெற்ற போதும், அது தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் இல்லை என, வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆவா என்பது கொள்ளைக் கூட்டம் எனவும் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி வலயத்தில் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் இருந்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார். வடக்கிற்கு வரும் எந்தவொரு நபரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வன்னி பகுதியிலுள்ள அனைவருக்கும் பூரண பாதுகாப்பு காணப்படுவதாகவும், வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
தலைக்கவசத்துக்கான தடை நீக்கம்!
இலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்தது!
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரச...
|
|
|


