வடக்கின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021

வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் வட மாகாணம் போன்று மாத்தறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: