வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்!
Wednesday, July 21st, 2021
வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரை நியமிக்க ஆராயப்பட்டது.
இந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவை வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது!
தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில் மதங்களிடையிலான ஒற்றுமை சீர்குலைக்கப்படுகின்றது - வடக...
|
|
|


