வடக்கின் நிலை குறித்து ஜனாதிபதி அவசர சந்திப்பு!
Monday, December 24th, 2018
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11,299 பேர் இடம்பெயர்ந்து 38 முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


